ABP Tamil · Entertainment
இது நிஜமா? அஜித்துடன் இணையும் விஜய்! 'கிளாடியேட்டர்ஸ்' படத்தில் அரங்கேறும்
நடிகர் அஜித்குமாரின் கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படத்தில் முதல்வர் விஜய் கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் விஜௌய் முதலீட்டுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக லண்டன் சென்றுள்ளார். இந்தப் பயணத்தின்போது லண்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நேற்று நடைபெற்ற 2026 மிச்செலின் லீ மான்ஸ் கப் கார் பந்தயத்தை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். விஜய் - அஜித் சந்திப்பு அதற்கு முன்பாக அஜித்தும் விஜயும் நேரில் சந்தித்துக்கொண்டனர். அப்போது இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்தனர். அஜித்திற்கு முதல்வர் விஜய் வாழ்த்தும் தெரிவித்தார். இருவரின் சந்திப்பு தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பேசுப்பொருளானது.
Licensed summary · LicensedSummary